ஒரு கிராமம், அவர்களிடம் கொள்ளையடிக்கும் ஒரு கொள்ளையர்கள் குழு. அதை நேரடியாக எதிர்க்க முடியாத கிராம மக்கள். கை தேர்ந்த வீரர்களை வேலைக்கமர்த்தி கொள்ளையர்களை விரட்டுகிறார்கள் இது தான் 1954 வெளியான ஜப்பானிய திரைப்படமான செவென் சாமுராயின் கதை. இதை அப்படியே எடுத்து ஏழு சாமுராய்களை இரண்டாக்கி கொண்டது இந்தியாவில் வெளியான ஷோலே.
இரண்டுமே வெற்றி படங்கள் தான், ஆனால் அவை சொல்லும் சேதியும் அவை கொண்டாடபடுவதற்க்கான மக்களின் மனநிலை?ஷோலேவின் ஆதீத ஹீரோயிஸம்?
1954 எடுக்கபட்ட செவென் சாமுராயில் இருந்த உயிர் 1975ல் எடுக்கப்பட்ட ஷோலேவில் இல்லை. வெறும் கால மாற்றம் மடுமல்ல இந்தியாவில் எந்த ஆண்டு எடுத்தாலும் ஷோலே வெற்றிபெறுமே ஒழிய செவென் சாமுராய் அல்ல.
ஒரு படம் ரீமெக் செய்யபடும் போது உத, தமிழிலிருந்து தெலுங்கிற்கோ அல்லது கன்னடத்திற்கோ என்றால் அதில் நிகழும் மாற்றங்கள் என்ணிலடங்கா. தமிழ் படமான ரமணாவில் டூயட் இல்லை, கலர் கலர் டான்ஸ்கள் இல்லை. ஆனால் தெலுங்கு ’டாகூரி’ல் 5 குத்து பாட்டுக்கள்.
செவென் சாமுராய்க்கு வருவோம், செவென் சாமுராய் படத்தின் கதைப்படி, கொள்ளையர்களை எதிர்க்க கிராம மக்கள் சாமுராய்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள், ஆனால் போக போக சாமுராய்கள் ஒரு திட்டம் வகுத்து அந்த கிராம மக்களுக்கு போர் பயிற்ச்சி கொடுத்து, உச்சகட்ட காட்சியில் சாமுராய்களும் மக்களும் இணைந்து வியுகத்தை செயல்படுத்தி கொள்ளையர்களை கொல்லுகிறார்கள்.
மாறாக ஷோலேவிலோ வேலைகமர்த்தப்படும் அமிதாபும் தர்மேந்திராவும் இரண்டு துப்பாக்களில் டுமீல் டுமீல் என்று சுட்டு அனைத்து கொள்ளையர்களையும் கொன்றுவிடுகிறார்கள்.
இது தான், தலைவன் வழிபாடு. ஒரு படத்தில் கவுண்டமனி சொல்லுவார் “ இவனுங்க தலைவன் இல்லம இருக்கமாட்டான்களாப்ப” என்று. ஏன் இந்த தனிமனித வழிபாடு?
காலம காலமாக பெரியார் போதித்ததும் இந்த தனிநபர் வழிபாடை எதிர்த்து தான்.இன்னொருபக்கம் கம்யுனிஸம் சொல்லும் தலைவனும் அவன் தலைவனில்லை மக்களை ஒன்று திரட்டி ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் வழிகாட்டி தான்.
செவென் சாமுராய் படத்தின் இறுதியில் சாமுராய்கள் குழுவில் மூத்தவர் சொல்லுவார், ” மக்கள் தான் வென்றார்கள் என்று” ஆம் யார் என்ன வீரத்துடன் வந்தாலும் மக்களே வெல்லுகிறார்கள். இன்டல்செக்குவல்கள் எத்தனை பேர் வந்தாலும் மக்களே வெல்லுகிறார்கள்.
ஆனால் இந்தியாவை பொருத்தவரை, அது அழகாக மழுங்கடிக்கப்படுகிறது, நம்முடைய புராண கதைகள், மதம் சொல்லும் சேதி கூட கடவுள் அவதாரம் எடுப்பார், தூதுவனை அனுப்பவார் நம்மை கப்பார் என்று தான், எதற்கும் யாரொ ஒருவர் அந்தரத்தில் இருந்து குதித்து நம்மை காப்பாற்றிவிட்டு சென்றுவிடுவார் அவருக்கு நாம் அடிபணிந்தால் போதும் என்ற மனொபாவத்துடன் வாழ்கிறோம் , எந்த பிரச்ச்னைக்குமே யாரோ ஓருவர் குதித்து வந்து பார்த்துக்கொள்வார், நமகென்ன, நான் யார் போன்ற நடுதர வர்க மனொபாவத்துடன் ஒதுவிங்கிவிடுகிறார்கள்.
சரி வருகிற தலைவனாவது மக்களை மதிக்கிறானா என்றால் இல்லை, அவனும் இவர்களை குனியவைத்து கும்மியடிப்பதில் தெளிவாக இருக்கிறான், பின்பு ஒரு நாள் இன்னோரு ஹிரோவாள் அதாவது தலைவனால் அவன் சிதைக்கபடுகிறான்.
இத்தகைய எண்ணமுடைய மக்களின் வெளிபாடாக சினிமா ஹீரோயிஸத்தின் பின்னால் போய் இப்பொழுது, முளைச்சி மூணு இல விடாததெல்லாம் தலைவன்னு சொல்லிகிட்டு திரியுது..அதுக்கு பின்னாலும் ஒரு கூட்டம்..
No comments:
Post a Comment