முதியோர்
காயமுற்றோர் மற்றும் நோயாளிகள்
குழந்தைகள் - வயதுவந்தோர்
பிணக்குவியல்களை
நிறைய நிறையக் கண்ணுற்றேன்
பாவங்களை ஊக்குவிக்கும்
துறவிகளின் உருவங்களைக் கண்டேன்
*பிரித் நூலும் கட்டப்பட்டது
'நாட்டைக் காக்கும்' எனக்குக் காவல் கிட்டவென
பிரார்த்தித்த தகவல்களும் கிடைத்தன தாயிடமிருந்து
விழி சதை இரத்தமென தானம் செய்து
உங்களிடம் வந்துள்ளேன்
ஆனாலும் புத்தரே
உங்களது பார்வை மகிமை மிக்கது
கிராமவாசிகளுக்கு மறந்துபோயிருக்கும்
மனைவி குழந்தைகளோடு
நலம் வேண்டிப் பாடும்
சுகப் பிரார்த்தனைப் பாடலிடையே
எனது தலையை ஊடுருவும்
உங்களது பழக்கமில்லாத புத்தர் விழிகள்
கண்ணெதிரே தோன்றுகின்றனர்
என்னால் கொல்லப்பட்ட மனிதர்கள்
ஆங்காங்கே வீழ்ந்துகிடந்த
அவர்கள் மெலிந்தவர்கள்
துயருற்ற ஏழைகள்
ஒரே நிறம்
ஒரே உருவம்
எல்லோருக்குமே
எனது முகம்
நூறு ஆயிரமென
நான் கொன்றொழித்திருப்பது
என்னையேதானா
பாளிச் செய்யுள்களை இசைக்கின்ற
சிறிய பிக்குகள்
பின்னாலிருந்து
நீங்கள் தரும் புன்முறுவல்
தென்படாதிருக்க இரு விழிகளையும் மூடிக்கொள்கிறேன்
கரங்கள் தென்பட்டு விடுமோ என்ற அச்சத்தில்
வணங்குவதற்குக் கூட உயர்த்தாமலிருக்கிறேன்
பிரித் நூல் - பாதுகாவல் தேடி, புத்தரை வணங்கி, உடலில் கட்டப்படும் நேர்ச்சை நூல்.
மூலம் - மஹேஷ் முணசிங்ஹ (சிங்கள மொழியில்)
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
About
- pras
- VADDU KODDAI EAST, Jaffna, Sri Lanka
- We the Maruthanayagam boys, a great gang of youngsters of Vaddukoddai East, dominated the whole Jaffna during late 90's and early 2000 with our skills in soft-ball cricket. As a group of energetic,creative and skillful kids we started a softball cricket team called WINBIRDS 0n 1995. We started practicing cricket in a small empty space, which belongs to one of our friends, which is called Maruthanayagam stadium.(the story behind this name will be posted later) We were the top soft ball team in the Chankanai division and one among the top four in Jaffna district until we dissolved our team due to the unwanted situations in Jaffna during 2006/07. Now we are settled indifferent jobs in different places. Even though we are living different lives allover the world we all are still MARUTHANAYAGAM BOYZ. ONE FOR ALL! ALL FOR ONE!
Blog Archive
-
▼
2010
(32)
-
▼
August
(11)
- கவிக்கோ அப்துல் ரகுமான் Collections
- கவிக்கோ அப்துல் ரஹ்மானின் collectios
- கவிக்கோ அப்துல் ரகுமான் Collectios
- ஊனமுற்ற இராணுவ வீரனும் புத்தரும் :மஹேஷ் முணசிங்ஹ
- வஸ்ர்து
- வாந்தி எடுப்பவனை ஊக்குவிக்கும் விதமாகத் தேர்வு முற...
- நண்பர்களின் பிறந்த நாளை சுலபமாக் கண்டுபிடி
- அன்புக் குழந்தைகளேபெரிய பிள்ளைகளுக்கு வாய்ப்பாடு ந...
- மனுஷ்ய புத்திரன் கவிதைகள்-2
- மனுஷ்ய புத்திரன் கவிதைகள்- 1
- தமிழ் சினிமாவில் கலை: வணிகப் படங்கள் - கலைப் படங்கள்
-
▼
August
(11)
No comments:
Post a Comment